மு.க.ஸ்டாலினுக்கு கென்டக்கி கர்னல் விருது

சென்னை

அமெரிக்க நாட்டின் உயரிய விருதான கென்டக்கி கர்னல் விருது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:

கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய விருது இது. 1812-ம் ஆண்டு இந்த மாகாணத்தின் முதல் ஆளுநரான ஐசாக் ஷெல்பியால் இந்த விருது வழங்கும் முறை துவக்கப்பட்டது.

சமுதாயப் பங்களிப்பு, நாட்டுக்கு செய்த சேவை மற்றும் சிறந்த சாதனைகளுக்காக வழங்கப்படுகிறது.

இந்த விருது பெற்றோர் கென்டக்கி மாகாணத்தின் நல்லெண்ணத் தூதராகவும், உலகில் உள்ள மிகச் சிறந்த மனிதர்களுள் ஒருவராகவும் கவுரவிக்கப்படுவர்.

அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் லிண்டன் பி.ஜான்சன், ரொனால்ட் ரீகன், வின்ஸ்டன் சர்ச்சில், ஜார்ஜ் புஷ், கிளிண்டன், குத்துச் சண்டை வீரர் முகமது அலி உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

விருது அளிக்கப்பட்டது தொடர்பாக கென்டக்கி மாகாண ஆளுநரின் செயலாளரும், உலக அமைதிக்கான தூதருமான ஜார்ஜ் ரீப் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், சேவையாற்றுபவர்களுக்கு வழகாட்டும் விளக்காக மு.க.ஸ்டாலின் உள்ளார் என்றும், விருதைப் பெற்றதன் மூலமே விருதுக்கே ஸ்டாலின் பெருமை சேர்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -