சூப்பர் ஸ்டாரின் 'கோச்சடையான்' பட ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சமயத்தில் மீண்டும் ஒரு செய்தி உங்களுக்காக..

கோச்சடையான் படத்தில் சினேகா ரஜினியின் தங்கையாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக ருக்மணி  அந்த பாத்திரத்தில் நடிக்கிறாராம். இவர் ஏற்கனவே 'ஆனந்த தாண்டவம்', 'பொம்மலாட்டம்' போன்ற படங்களில் நடித்தது தெரிந்திருக்கலாம். கோச்சடையானுக்கு பிறகு தமிழில் தனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிபர்ப்போடு இருக்கிறார் ருக்மணி.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தில் சரத் குமார், ஆதி,  நாசர், ஜாக்கி  ஷரப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3D டெக்னாலாஜி மூலம் உருவாகும் இப்படம் இப்போதே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது என்னவோ உண்மைதான்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -