மெரினா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் இயக்குனர் எழில் இயக்கும் 'மனம் கொத்தி பறவை'. இதனை அடுத்து சிவா நடிக்க இருக்கும் படம் 'மச்சான்'.
இப்படத்தை இயக்குபவர் சக்தி சிதம்பரம். இது சக்தி சிதம்பரத்தின் அக்மார்க் கமர்சியல் படமாக இருக்கும். காதல், காமெடி, ஆக்சன் என மசாலா படம் தருபவர் சக்தி. சிவா காதல், காமெடிக்கு ஓகே. ஆக்சன் காட்சிகளில் என்ன செய்யபோகிறார்?
இது பற்றி இயக்குனர் எழில் கூறுகையில், 'இந்த படம் சிவாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும்' என்கிறார். ஆக்சன் சிவா பாரக்! பாரக்!!
