- Back to Home »
- நாடக மேடை ஏறும் திரை நட்சத்திரங்கள்!
தெருகூத்து நாடகமாகி நாடகம் சினிமாவாக வளர்ச்சி அடைந்தது. மீண்டும் நாடக மேடையேற பாலிவுட் மாலிவுட் நட்சத்திரங்கள் தயாராகி அறிவித்தும் விட்டார்கள். கோலிவுட்டில் தற்போது 'மெஹ்பத்' என்ற சேக்ஸ்பியர் நாடகம் மூலம் திரை நட்சத்திரங்கள் மேடையேற தயாராகிவிட்டார்கள். தியேட்டர் லேப் தயாரிப்பில் புகழ் பெற்ற சேக்ஸ்பியர் வரலாற்று நாடகமான மெஹ்பத் நாடகம் மே மாதம்1ம் தேதி முதல் 5ம் தேதி வரை YMCA மைதானத்தில் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடை பெற உள்ளது.
இது பற்றி இயக்குனர் ஜெயராவ் கூறுகையில் "இந்த மேடை நாடகம் நல்ல திறமைசாலிகளை அறிமுகப்படுத்தும் மேடையாக இருக்கும். மெஹ்பத் நாடகத்தில் தனக்கு நல்ல வேடம் வேண்டும் என்று கேட்டு வாங்கி நடிக்கிறார் மிருகம், அரவான் படங்களின் நாயகன் ஆதி மற்றும் தமிழச்சி தங்க பாண்டியன், போஸ் வெங்கட், கார்த்திகேயன், பாரதி மோகன், மு.களஞ்சியம், திருச்செல்வம் , கரிகாலன், மீரா கதிரவன், சேகர், அரசு, அருண், பாலாஜி, ஜெய் ஆனந்த், சங்கீதா, சுகிதா, ரிதமிக்கா, சுரேந்திரன், திலக், ராகவா நடராஜன், கிருஷ்ணா, கார்த்திக், ராஜேஷ், பிரபாத், தென்னவன், சந்துரு, லோகேஷ், ஷோபன், ஜீவா நடிக்கிறார்கள். இவர்களுடன் பாரதி மணி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
இந்த அறிமுக விழாவில் பேசிய சத்யராஜ், 'இது ஒரு நல்ல முயற்சி நல்ல நடிகராக பலர் வருவதற்கான வாசல் நாடக மேடை! மெஹ்பத் நாடகத்தில் என்னை நடிக்குமாறு கேட்கின்றீர்கள், நாடகத்தில் நடிப்பதற்கான பயிற்சியை எடுத்துக்கொண்டு மேடை ஏறுவது தான் சிறப்பு! அதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை!. அப்படியே நடிக்க வந்தாலும் எனக்கு முழுமையான பேசப்படும்படியான கதாபாத்திரம் தேவை. அப்படி ஒரு வாய்ப்பு வரும் பட்சத்தில் நான் தயார்' என்றார் சத்யராஜ்.