- Back to Home »
- எல் , பி , ஜ »
- ஐ.பி.எல்.ரூ.900 கோடிக்கு இன்சூரன்ஸ்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 5-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப்போட்டியை ரூ.900 கோடிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இன்சூரன்ஸ் செய்து உள்ளது. போட்டி ரத்து செய்யப்பட்டால் அதற்கான பாலிசியாக இந்த தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையை விட இரண்டு மடங்காகும்.
உலக கோப்பை போட்டி ரூ.400 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியை விட இது ரூ.150 கோடி கூடுதலாகும். 4-வது ஐ.பி.எல். போட்டிக்கு ரூ.750 கோடி தான் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்தது.
விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் அதிகமான தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்படுவது ஐ.பி.எல். போட்டி தான் காமன்வெல்ஸ் விளையாட்டுப்போட்டி ரூ.200 கோடிக்கும், பார்முலா 1 கார்பந்தய போட்டி ரூ.500 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்தது.