தானே நிவாரண நிதியுதவி ரூ.128 கோடியை எட்டியது

சென்னை,

தானே புயல் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை பொதுமக்கள் அளித்த நிதியுதவி ரூ.128 கோடியை எட்டியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக உடல் நலம் மற்றும் குடும்ப நலத் துறை ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் மற்றும் அத்துறை அமைச்சரின் தனிப்பட்ட பங்களிப்புடன் ரூ.5.39 கோடியை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அளித்தார்.
அதேப்போல, உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பனும் தானே புயல் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்துள்ளார்.