சித்தர் பெருமக்களின் உறைவிடங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கப் புகுந்தால், மூன்று வகையான தகவல்களே நமக்கு கிடைக்கின்றன. ஒன்று அவர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்கள், மற்றது அவர்கள் தங்கியிருந்த குகைகள், மூன்றாவது அவர்களது ஆசிரமங்கள் பற்றிய விவரணைகள்.
முந்தைய சதுரகிரி மலை பற்றிய தொடருக்காக, சதுரகிரியில் அமைந்துள்ள பல்வேறு சித்தர் பெருமக்களின் இருப்பிடத் தக்வல்களை தேடி தொகுத்திடும் போது அவர்கள்