கேரள மாநிலம் இடுக்கியில் திமுக எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டத்தை மலையாளிகள் சேதப்படுத்தியுள்ளனர்.



முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு மாநிலங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வந்தமேட்டில் திமுக எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டம் உள்ளது. இன்று அந்த தோட்டத்துக்குள் புகுந்த மலையாளி கும்பல் ஒன்று சுமார் ஒரு ஏக்கருக்கு மேல் ஏலக்காய் செடிகளை வெட்டிச் சாய்த்துள்ளனர்.

இடுக்கி மாவட்டம் புளியமலை பகுதியில் எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கை மலையாளிகள் நேற்று முன்தினம் சேதப்படுத்தினர். இரவோடு இரவாக பெட்ரோல் பங்குக்குள் புகுந்த சிலர் அங்கிருந்த பம்புகளை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராமகிருஷ்ணனின் ஏலக்காய் தோட்டம் இன்று தாக்கப்பட்டுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -