திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலை மகளிரியல் துறை சார்பில், வாழை மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்பு குறித்த 45 நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. திருச்சி பாரதிதாசன் பல்கலை மகளிரியல் துறை, சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனம் (எம்.எஸ். எம்.இ.,), தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (வீட்) சார்பில், வாழை மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்புக்கான 45 நாள் பயிற்சி முகாம் துவக்க விழா நேற்று நடந்தது.

மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை தலைமை வகித்தார். திருச்சி "வீட்' துணைத்தலைவர் மல்லிகா, திருச்சி மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கந்தசாமி, திருச்சி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதன்மை மேலாளர் சக்திகுமார், எம்.எஸ்.எம்.இ., ஆய்வாளர் கார்த்திகேயன், குளித்தலை சரஸ்வதி வேளாண் ஆராய்ச்சி மைய நிபுணர் அனிதா உட்பட பலர் பேசினர். அதைத்தொடர்ந்து, மகளிருக்கான தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மகளிரியல்துறை இயக்குனர் மணிமேகலை தலைமை வகித்தார். கனரா வங்கி தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய அலுவலர் ராஜேஸ்வரி, திருச்சி ஜெயம் ஸ்நாக்ஸ் உரிமையாளர் இன்பவல்லி, தஞ்சை வர்ஷினி இன்ஜினியரிங்ஸ் கீதா உள்ளிட்டோர் மகளிருக்கான தொழில் வாய்ப்பு குறித்து பேசினர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -