உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்சி, வேலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. மேயர்கள் பதவி ஏற்கிறார்கள்.
சென்னை மேயராக சைதை துரைசாமி பதவி ஏற்கிறார். செவ்வாய்கிழமை காலை 10 மணி அளவில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மேயர் பதவி ஏற்பு விழாவில் முதல் அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார். புதிய மேயர் சைதை துரைசாமிக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

பதவி ஏற்புக்கு பின் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் சைதை துரைசாமி ஆசிபெறுகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேயர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கொடி, தோரணங்களும், பேனர்களும் அமைக்கிறார்கள். முதல் அமைச்சர் வருகையையொட்டியும், கோலாகல பதவி ஏற்பு விழாவையொட்டியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.