திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகளின் மதிப்பு குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
 இது குறித்து, செய்தியாளர்களிடம் பிரவீண்குமார்,
 ’’வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், பட்டியலில் ஆட்சேபம் இருந்தால் படிவம் 7-ம், திருத்தங்கள் இருந்தால் படிவம் 8-ம், முகவரி மாற்றம் இருந்தால் படிவம் 8 ஏ-வும், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ அல்லது மாற்ற வேண்டுமானாலோ படிவம் 001சி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலின் போது வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின் போது கணக்கில் காட்டப்படாமல் இருந்த 93 லட்ச ரூபாயும், 34 கிலோ வெள்ளியும், 4 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றை யாரும் கோராத காரணத்தால் அவை வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது பணம் அளித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக 100 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்று கூறினார்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -