தூக்கிலிடப்பட்ட மருதுபாண்டியர் சகோதரர்களின் 210வது நினைவு நாளை முன்னிட்டு, திருப்புத்தூர் நினைவகத்தில் உள்ள அவர்களது சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவக வளாகத்தில் வாரிசுதாரர்கள் பொங்கலிட்டு, குருபூஜை நடத்தினர்.

கலெக்டர் ராஜாராமன் கொடியேற்றினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, தகவல்தொழில்துறை அமைச்சர் உதயக்குமார் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினர்.


தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -