01-10-2011 அன்று மாலை நான்கு மணியளவில் சர்.பிட்டி . தியாகராயர் அரங்கம் , ஜி .என். செட்டி சாலை,தி.நகர், சென்னை. எனும் முகவரியில்  தேவரின மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் +2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தேவரின 26 மாணவ மாணவிகளுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு தேவரின அமைப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந் நிகழ்வில் வரவேற்புரையை திருமிகு. வி.குருமூர்த்தி அவர்களும், தலைமை திருமிகு.பி.கே. செல்வராஜ் அவர்களும், முன்னிலை திருமிகு . எஸ்.சங்கரலிங்கம், சிறப்பு விருந்தினர் கல்விக்காவலர்.ஸ்ரீமான் பூண்டி அய்யா கி.துளசியையா வாண்டையார், வாழ்த்துரை திருமிகு .எஸ்.ஆர்.கருப்பணன் IAS(R) , இயக்க செயல்பாடுகள் திருமிகு .எஸ்.சங்கர வடிவேல் IRS (R) அவர்களும் நிகழ்வை மெருகூட்டினர். தேவரின ஒற்றுமை எனும் கருத்தில் கா.வே.சே.மருது மோகன் உரையாற்றி அரங்கத்தை உணர்வூட்டினார். அவர்கள் நன்றியுரை வழங்க விழா சிறப்புற முடிவடைந்தது.



- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -