சிறுமியை கற்பழித்து கொலை செய்த பௌத்த மதகுருவிற்கு தண்டனை வழங்க தாமதம் ஏன்?

8வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பௌத்த மதகுருவிற்கு எதிராக தீர்பழிப்பதில் குருநாகல் நீதிமன்றம் காலம் தாமதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கின் இறுதி கூடுகை நேற்று முன்தினம் குருநாகல் நீதிமன்றத்தில் இடம் பெற்றது. எனினும் இதன் போது கூட மதகுருவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படவில்லை.
குற்றம் சுமத்தப்பட்டவர் ஸ்ரீபுர பிரதேசத்தில் பௌத்த மத குருவாக இருந்தவராவார்.
2001ஆம் ஆண்டு ஜீலை மாதம் 02ஆம் திகதி கனிஸ்ட பாடசாலை ஒன்றில் 08 வயது சிறுமியொருவர் மிகவும் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக குறித்த மதகுரு கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றம் சுமத்தப்பட்டவர் தனக்கும் இக் கொலைக்கும் எவ்வித தொடர்புமில்லை எனவும் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் ஆறொன்றில் உடைகளை துவைத்துக் கொண்டிருந்த வேளை பொலிஸார் கைது செய்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.