இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு அதுவும் தமிழர்களின் காசில் பிழைத்துக் கொண்டு தமிழ் மக்களை கொச்சைப் படுத்தி திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றது தினமலர் என்ற நாளிதழ்.
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் உயிரைக் காப்பதற்காக தீக்குளித்த, தோழர்.செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்தியும், தமிழினத்தையும், தமிழினத் தலைவர்களைப் பழித்தும் கட்டுரை வெளியிட்ட தினமலர் நாளேட்டை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


"தமிழகத்தை விட்டு தினமலரைத் துரத்துவோம். தமிழினத் துரோகியே வெளியேறு" என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை புதுச்சேரியிலும் தினமலர் நாளிதழை எரித்துப் போராட்டம் நடாத்திய ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் நாளிதழானது தொடர்ந்து தூக்குத் தண்டனைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றது. அதன் காரணமாக தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடும் பல்வேறு அமைப்புக்கள், ஆளுமைகளையும் கண்டபடி விமர்சித்தும் வருகின்றது.
செங்கொடி காதலித்து தற்கொலை செய்து கொண்டதாக இன்றைய தினம் எந்த வித ஆதாரமும் இல்லாமல் செய்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழின விரோதக் கருத்துக்களை பரப்பி வரும் தினமலர் மீது தமிழ் மக்கள் சீற்றத்துடன் இருப்பதை பல்வேறு இடங்களிலும் காண முடிகிறது.
செங்கொடி காதலித்து தற்கொலை செய்து கொண்டதாக வதந்தியைப் பரப்பி பொய்ச் செய்தியை வெளியிட்ட பரதேசி தினமலரின் நிரூபர் ரெங்கராஜ் என்பவரே இவராவார்.



- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -