அகத்தியர் ஆரூடம் - 22 முதல் 30 வரையிலான பலன்கள்!

௨௨. (22) வந்தால்..

உள்ளத்தின் கவலையெல்லாம் உடனே தீரும்
உறவற்றுப் போனவரும் வந்து சேர்வார்
விள்ளவும் முடியாது உந்தன் வாழ்க்கை
வினோதமாம் பொன் பொருளும் சேர்க்கையாகும்
வள்ளலின் கிருபையால் வருட மூன்று
வலுக்குமப்பா எத்தொழிலைச் செய்தபோதும்
கள்ளத்திரு மால்மருக னுதவியாலே
கருதியதெல்லா முனக்கு ஜெயதாமே.

ஆரூடத்தில் இருபத்தியிரண்டு வந்திருப்பதால், இனி உன் கவலைகளெல்லாம் நிலவைக் கண்ட இருள்போல்