மெய்ஞானம் @ தன்னையறிதல்!

சித்தர்களின் விஞ்ஞானம் பற்றி நிறையவே கதைத்தாயிற்று. இனிவரும் சில பதிவுகளில் அவர்தம் மெய்ஞானம் குறித்த எனது புரிதல்களை பகிர விரும்புகிறேன்.குத்து விளக்கின் சுடர் சலனமில்லாத அமைதியுடன், தான் இருக்கும் சூழல் பற்றிய கவலையின்றி ஒளிர்வது அழகியல் சார்ந்த பரவச அனுபவம்.இந்த சுடர் தனக்கென எதையும் சேமித்துக் கொள்வதில்லை. சுடரின் தன்மையானது இருக்கிற வரையில் ஒளி மிகுந்ததாகவே இருக்கிறது. அடுத்த முறை கவனித்துப்