சித்தர்கள் நாத்திகர்கள்?



ஆதியில் மனிதன் தன்னைச் சூழ்ந்திருக்கும் இயற்கையை, அதன் பேராற்றலைக் கண்டு அஞ்சி நடுங்கி  தன்னை காத்துக் கொள்ள வேண்டி அவற்றை பணிந்து வணங்கத் துவங்கினான். இப்படித்தான் பஞ்சபூத வழிபாடுகள், மர வழிபாடுகள், நாக வழிபாடுகள் போன்றவை துவங்கின. 



பின்னாளில் இந்த பிரபஞ்ச சக்திகளுக்கு உருவமும், குறியீடுகளும் கற்பிக்கப் பட்டு அவற்றை மனமுருகி வணங்கினால் அவை மகிழ்ந்து சாந்தமாகி நல்வாழ்வை அருளும் என்கிற