வள்ளல் பெருமானும் வைணவமும்.



வள்ளல் பெருமானின் ஆன்மிக பயணம் என்பது பக்தி மார்க்கமாய் துவங்கி ஞான மார்க்கத்தை தேடியதாக இருந்திருக்கிறது. துவக்கத்தில் இறைவனை ஆராதித்து மகிழ்ந்தவர், ஒவ்வொரு கட்டமாய் தன்னுடைய நிலைப்பாடுகளை தயக்கமின்றி சுயபரிசோதனை செய்து கொண்டிருக்கிறார். 


தன்னிலை அறிவதும், அதை உணர்வதுமே ஞானத்தின் முதல் படி. இதைத்தான் வள்ளல் பெருமானின் துவக்க கால பாடல்களின் ஊடே நாம் காண முடிகிறது. தன்னை அறிந்த ஒருவரால்