புதுடில்லி : போக்குவரத்து விதிமுறைகளை மீறிவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக மொபைலில் பேசியபடி வாகன ஓட்டுவோருக்கு ரூ.500ம், அதிகப்படியான குற்றங்களுக்கு ரூ.5000மும், சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.500 முதல் ரூ.1500 வரை அபராதம் விதிக்கபட உள்ளது.
