பணியில் இருந்து நீக்கிய மேலாளரை கொன்ற தொழிலாளர்கள்

சென்னை, 

சென்னை விமான நிலையத்தின் கேட்டரிங் பிரிவு மேலாளர் பிரதாப் சிங் (55) பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து லட்சக்கணக்கான பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அவருடன் பணியாற்றி வந்த நேசக்குமார் (25), பாலசுப்ரமணியம் (29) ஆகியோரை விசாரணை நடத்தினர். இதில் பிரதாப் சிங் தங்களை பணிநீக்கம் செய்த காரணத்தால், அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து ரூ.16.4 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.