பெங்களூரூ கோர்ட்டில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

பெங்களூரூ
கனிம சுரங்க மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி ஆஜர்படுத்த வரும்போது அவருடன் வந்த வக்கீல்கள், பத்திரிகையாளர்களை தாக்கினர். இதில் பலர் காயமுற்றனர். சம்பவத்தை கண்டு தடுத்த போலீஸ்காரர்கள் மீதும் வக்கீல்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் வக்கீல்கள் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா மீது சொத்து குவிப்பு வழக்கு நடக்கும் கோர்ட் வளாகத்தின் அருகில்தான் இந்த சம்பவம் நடந்தது.


இன்று காலையில் ஜனார்த்தன ரெட்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். இந்நேரத்தில் அழைத்து வருவதை படம் எடுக்க, பத்திரிகை மற்றும் புகைப்படக்காரர்கள் கூட்டமாக காத்திருந்தனர். பலரும் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது அவருடன் வந்த வக்கீல்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
 தொடர்ந்து படம் எடுக்கவும் வக்கீல்கள் பத்திரிகையாளர்களை கடுமையாக திட்டினர். தொடர்ந்து சிலரை அடித்தனர். கற்களால் வீசி தாக்கினர். இதனையடுத்து அந்த பகுதி பெரும் களேபரமானது. பத்தரிகையாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயினர். தொடர்ந்து பத்திரிகை வாகனங்கள் , டி,வி,. காமிராக்கள், சேட்லைட் கருவிகள் நொறுக்கப்பட்டன. போலீசார் தடுத்த போது வக்கீல்கள் போலீசையம் தாக்கினர் .நிலை கட்டு மீறி போகவே போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்த சம்பவத்தில் பல பத்திரிகையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.