பெங்களூரு ஐகோர்ட் வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை, கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற வன்முறையில் 50 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக, 5 வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வக்கீல்கள் கைதை கண்டித்து, இன்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வக்கீல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
