திமுக பேச்சாளருக்கு வீடு ஒதுக்கீடு
அதிர்ச்சியில் அதிமுக பிரமுகர்


சென்னையில் குறைந்த வாடகையில் வீடு கிடைப்பது குதிரைகொம்பு என்பது அனைவரும் அறிந்ததுதான்,
பொதுமக்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் குறைந்த அளவில் வாடக்கை விடப்பட்டுவருகிறது
இதில்தான் அதிகாரம் உள்ளவர்கள் அதிரடியாக பல லகரங்களை பார்பார்கள்,இதில் கட்சி வித்தியாசம் எல்லாம் கிடையாது என்பதற்க்கு சமீபத்திய உதாரணம் இதே
சிந்தாதரிபேட்டையில் அப்பகுதிய அதிமுக பிரமுகர் தன்னுடைய மகளுக்கு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீட்டை ஒதுக்க வைத்தியமான அமைச்சரை சந்தித்தார்,
அமைச்சரும் கண்டிப்பாக செய்து தருகிரேன் என்ற உறுதிமொழியில் உருகிபோய் வந்துவிட்டார்
ஆனால் சில நாட்களில் இவர் கூறிப்பிட்ட காலி வீட்டுக்கு திமுக பேச்சாளர் வந்து குடிபுக, அதிமுக பிரமுகர் ஆடிபோய்விட்டார்
உடனே அமைச்சரை பார்த்து முறையிட அவரும் அப்படியா என்று கதை கேட்டராம்,
கண் சிவக்க நடந்த அனைத்தையும் மேலிடத்திற்க்கு புகாராக அனுப்பிவிட்டராம்,
அமைச்சரின் தரப்பு இதை நாங்கள் செய்யவில்லை அப்போது இருந்த அதிகார மையம் செய்த வேலை இது என்று தப்பித்துகொண்டதாம்
ஆனாலும் இதுவரை திமுக பிரமுகரை வெளியேற்ற முடியவில்லையாம்
விசாரித்தால் வைத்தியமானவரின் ஆசி இன்னும் தொடர்வதுதான் காரணமாம்