இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 11-ந்தேதி முதல்22-ந் தேதி வரை வங்காளதேசத்தில் நடக்கிறது.
புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு இன்று மும்பையில் நடைபெற்றது. இத்தொடருக்கான அணியிலிருந்து மோசமான பார்ம் காரணமாக அதிரடி வீரர் ஷேவாக் நீக்கப்பட்டுள்ளார். சச்சினுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஹோபர்ட்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்த விராட் கோலிக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய யூசுப் பதான், அசோக் திந்தா, மனோஜ் திவாரி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணி வீரர்கள்: மகேந்திரசிங் தோனி (கேப்டன்-வி.கீப்பர்), விராட் கோலி (துணை கேப்டன்), சச்சின் தெண்டுல்கர், கவுதம் காம்பீர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ரவி அஸ்வின், பிரவீண் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, இர்பான் பதான், யூசுப் பதான், அசோக் திந்தா, மனோஜ் திவாரி.