இன்று இரவு சந்திரனின் அருகே வியாழன்
வெள்ளி ஆகிய கோள்கள் தோன்றும் அதிசயம் 

புது தில்லி,
சந்திரனின் அருகே வியாழன், வெள்ளி ஆகிய கோள்கள் தோன்றும் அதிசயம் திங்கள்கிழமை இரவு நிகழ இருக்கிறது.

சூரியன் மறைந்த சிறிது நேரத்தில் சந்திரனின் அருகே வியாழன் இருப்பதை மேற்கு திசையில் காண முடியும்.

இது குறித்து இந்திய கோள்கள் ஆய்வுத் துறை இயக்குநர் என்.ரகுநாதன் கூறியுள்ளது:

பூமிக்கு அருகில் வியாழன், வெள்ளி ஆகிய கோள்கள் வருகின்றன. எனவே சந்திரன் அருகே வியாழன் தோன்றுவதை பூமியில் இருந்து பார்க்க முடியும். சிறிது நேரத்தில் அதன் அருகிலேயே வெள்ளியும் தெரியும். இவை மூன்றும் சேர்ந்து அருகருகே காட்சி அளிக்கும்.

நிலவின் அருகே இரு கோள்களும் பிரகாசமாகவே தெரியும். வானில் மேகம் அதிகம் இருந்தாலும், இதனை மறைக்க முடியாது அளவுக்கு ஒளி இருக்கும்.

இதே நேரத்தில் மேற்குப் பகுதியில் செவ்வாய் கிரகமும் தெரியும். ஆனால் அதனை விண்வெளியை ஆராயும் தொலைநோக்கியைக் கொண்டுதான் பார்க்க முடியும்.

மார்ச் 14-ம் தேதியன்று வியாழன், வெள்ளி கிரகங்கள் வானில் இணைந்து தோன்றும் என்று அவர் தெரிவித்தார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -