சென்னை: மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னையில் தி.மு.க.,தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுடைய முதல் அணுஉலையில் 99 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இரண்டாவது அணுஉலையில் 95 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மின் தேவையை மக்கள் உணர்ந்துள்ளதால் அணுஉலையை திறக்க கோரி அதிக போராட்டங்கள் நடந்து வருகிறது. விரைவில் கூடங்குளம் அணுஉலையை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.