மனிதன் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் உயிர்த்திருக்க காற்றைப் போல உணவும் பிரதானம். இந்த உணவின் மகத்துவத்தைப் பற்றி சித்தர் பெருமக்கள் விரிவாகவே தங்களின் பாடல்களில் கூறியிருக்கின்றனர். இதற்கு உணவே மருந்து, மருந்தே உணவு என்ற முதுமொழியை உதாரணமாகச் சொல்லலாம்..
நாம் உட் கொள்ளும் உணவானது நமது உடலில் எப்படிப் போய் சேர்கிறது என்பதைப் பற்றி அகத்தியர் தனது வல்லாதி எனும் நூலில் பின் வருமாறு