டிச. 25 தேதி வீரப்பேரரசி வேலு நாச்சியார் - தேவரின பாதுகாப்பு பேரவை



டிச. 25 தேதி வீரப்பேரரசி வேலு நாச்சியார் அவர்களின் 215 வது நினைவேந்தலை முன்னிட்டு தேவரின பாதுகாப்பு பேரவையின் தலைவர் ந.பசும்பொன் பாண்டியன் தலைமையில் மேலூரிலிருந்து சிவகெங்கை நோக்கி சுமார் 15 ற்கும் மேற்பட்ட வாகனங்களில் பேரணியாக சென்று சிவகெங்கை 
அரண்மனையில் உள்ள வேலு நாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்யப்பட்டு பின்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இயக்கத்தின் சார்பாக தலைவர் ந.பசும்பொன் பாண்டியன் சிறப்புரையாற்றினார். இதில் தேவரின பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் கௌரவ ஆலோசகர் தி.அரப்பா, கௌரவ தலைவர் கம்பூர் சேகர், பொதுச்செயலாளர் சிவ.கலைமணி,இளைஞரணி ச் செயலாளர்  மாணிக்கம், அமைப்புச்செயலாளர் கருப்பையா, தலைமை நிலையச் செயலாளர் ஆண்டிச்சாமி சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் ஜெயந்தன் மாவட்டப் பொருளாளர் மாதுக்கண்ணன் மாவட்ட இளைஞரணி செயலாளர் பாண்டியராஜன், மேலூர் நகர் செயலாளர் இளவரசு மேலூர் ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் .