ரவிமேகலை என்னும் பொக்கிஷம்!

காலத்தே அழிந்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்களின் நூல்களை மின் நூலாக தொகுத்து இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் தொடர் முயற்சியில் எனது பதின்மூன்றாவது படைப்பாக கோரக்கர் அருளிய "ரவிமேகலை - 75" என்கிற இந்த நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.பதினென் சித்தர் மரபில் பதினாறாவது சித்தராக வைத்து போற்றப் படுபவர் கோரக்கர். பல்வேறு சித்தர் பெருமக்களும் இவரின் சிறப்புகளை தங்களின் பாடல்களில் குறிப்பிட்டிருப்பது