காகிதம் இரண்டாம் நூற்றாண்டில் சீனர்களால் கண்டுபிடிக்கப் பட்டது என வரலாறு கூறுகிறது. நமக்கு அநேகமாய் பதினாறு அல்லது பதினேழாம் நூற்றாண்டில்தான் காகிதம் பரிச்சயமாகி இருக்கும் என நினைக்கிறேன். இது பற்றிய தகவல் எனக்கு சரியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் விளக்கிடலாம்.சமீபத்தில் போகர் ஜால வித்தை நூலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பாடல் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆம், போகர் தனது பாடலில்