குண்டலினி... மனது?

மனதினன் என்கிற பதமே மனிதன் என்றாகியது, என என்னுடைய தமிழாசான் கூறுவார். மனுஷன், மனிஷி என்ற வார்த்தைகளை அன்றாடம் நாம் பயன் படுத்திக் கொண்டுதானிருக்கிறோம். ஆக, மனது என்கிற ஒன்றுதான் நம்முடைய உண்மையான அடையாளமாகிறது. மற்றபடி பிறப்பால் வருகிற சாதி, மதம், இனம், பால் என்கிற அடையாளங்கள் எல்லாம் மாயத் தோற்றமே, அழியக் கூடியது. மனமோ சூக்குமமானது, அழிவில்லாதது.மனம் என்பதை உயிரின் ஒரு கூறாக சிலர் கூறுகின்றனர்.