11000 போர்க் குற்றவாளிகள் விடுதலை என்று கூறும் புதிய தலைமுறைச் சனலைப் புறக்கணியுங்கள்.

11000 போர்க் குற்றவாளிகள் விடுதலை என்று புதிய தலைமுறைச் சனல் செய்திகளில் சொல்லுகிறது. அதாவது இன்று புதிய தலைமுறைச் சனல் தனது செய்திகளில் அமெரிக்கா அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட தீர்மானத்திற்கு வரவேற்பளிப்பதாகவும் முன்னாள் 11000 விடுதலைப் புலிகளின்(சந்தேக நபர்கள்) விடுதலையை வரவேற்பளிப்பதாகவும் தொடர்ந்து அந்தச் செய்தியில் போர்க் குற்றவாளிகளின் விடுதலையை அமெரிக்கா வரவேற்பளிப்பதாகவும் தனது செய்திகளில் சொல்லிக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா அல்லது இலங்கை அரசோ 11000 போர்க் குற்றவாளிகள் விடுதலை என்று கூறவில்லை. ஆனால் இந்தப் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி இப்படியான கீழ்தரமான, மனிதாபிமானமில்லாமல் பொய்ச் செய்தியைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. இதனைத் தமிழ் அரசியல் கடசிகள், அமைப்புகள், தமிழின உணர்வாளர்கள் கண்டித்து ஆர்பாட்டம் நடத்த வேண்டும் மற்றும் இதனைப் புறக்கணிக்க வேண்டும்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியானது இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) பாரிவேந்தர் என்றவருக்குச் சொந்தமான தாகும். இவர் கல்வியை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிதான் இந்தப் பாரிவேந்தர். அதன் மூலமாகவும் மற்றும் பல வழிகளிலும் சம்பாதித்த கறுப்புப் பணத்தினால் உருவாக்கியது தான் இந்தப் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி.

முகாங்களுக்குள் இருக்கும் அப்பாவி மக்களைப் பிடித்துவைத்து அவர்களைச் சித்திரவதை செய்த பின் 11,700 விடுதலைப்புலிகளை விடுதலை செய்திருகிறோம் என்று இலங்கை அரசு சொல்லியிருந்தது. 11,7௦௦ பேரும் விடுதலைப் புலிகள் என்றால் அத்தனை பெயரையும் எப்போதே கொண்டு இருப்பான் இந்த மஹிந்த. பல நாடுகளிடமிருந்து பண உதவியைப் பெறவும் போர்க் குற்றங்களைச் செய்யவில்லை என்பதற்கும் இப்படியான வேலைகளில் மஹிந்த ஈடுபடுகிறான். மற்றும் சந்தேக அடிப்படையில் பிடிபடும் நபர்களை விடுதலைப் புலிகள் என்று கூறி பலரை இலங்கையில் உள்ள பல பகுதிகளில் பிடித்து வைத்திருக்கிறான். அவர்களின் விடுதலையைப் போர்க் குற்றவாளிகள் விடுதலை என்று கூறுவதா? உண்மையான நடுநிலை ஊடகம் ஒன்று இப்படிக் கூறுமா?

இப்படியான பொய்ச் செய்திகள் போடுவதைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். பொது மக்களைப் பிடித்து வைப்பது அவர்கள் விடுதலைப்புலிகள் என்று சொல்லி விடிவிப்பதாகக் கூறுவதும். அதனைப் போடும் ஊடகங்களை தமிழின மக்கள் நம்பக் கூடாது. மற்றும் புறக்கணியுங்கள்.