ஸ்ரீரங்க திரவியம்..

சோழவள நாட்டில் காவிரி சூழ்ந்த ஒரு தீவில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற வைணவ திருத்தலம்தான் அருள் மிகு அரங்கநாதர் ஆலயம். தற்போது இந்த இடம் திருவரங்கம், ஸ்ரீரங்கம் என்ற பெயர்களால் அழைக்கப் படுகிறது. பழமையும், சிறப்பும் வாய்ந்த பிரம்மாண்டமான இந்த கோவில் பல்வேறு சோழ மன்னர்களால் கட்டி எழுப்பப் பட்டது. இதன் வரலாறு காலத்தே மிகப் பழமையானது. பல்வேறு படையெடுப்புகளையும், கொள்ளை சம்பவங்களையும் இந்த கோவில்