இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவிற்கு குறிப்பாக சேதுபதி மன்னர்களுக்கு உரிமையான கச்சத்தீவில் சுதந்திர தினத்தை கொண்டாடி கொடியேற்ற முயலும்போது 200 க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு ராமேஸ்வரம் கனிமொழி மகாலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகில் உள்ள தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு கச்சத்தீவு நோக்கி புறப்படவிருந்த உணர்வாளர்களை வழிமறித்து காவல்துறை கைதுசெய்தது. காவல்துறைக்கும் உணர்வாளர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தால் சற்று பரபரப்பு ஏற்ப்பட்டது. போராட்டத்தின் போது :
பாரதிய பார்வேட் பிளாக் தலைவர் திரு. முருகன்ஜி அவர்கள் " கச்சத்தீவு எமது மண்! அங்கே அன்னியருக்கு என்ன வேலை? தமிழக அரசு கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை விமர்சனம் செய்த ராஜபக்சேவை வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கை விடயத்தில் வெளிநாட்டுக்காரி , மண்பொம்மைசிங் இனியும் மௌனம் காத்தால் போராட்டம் தீவிரமாகும்" என்று தெரிவித்தார்.
இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பல்லடம் திரு.அண்ணாதுரை அவர்கள் " கச்சத்தீவு விவகாரம் முடிவுக்கு வரவேண்டுமெனில் இந்துக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடவேண்டும்! உங்களின் போர்குணமே மீட்டுத்தரும் மேலும், போர் குற்றவாளி ராஜபக்சேவை போர் குற்றவாளி என அறிவித்து இந்தியா பொருளாதார தடை விதிக்கவேண்டும்" என்றும் தெரிவித்தார்
மறத்தமிழர் சேனை தலைவர் திரு .புதுமலர் பிரபாகரன் அவர்கள் " கச்சத்தீவு விடயத்தில் மத்திய அரசு இனியும் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் எமது போராட்டம் தனி நாட்டிற்கான போராட்டமாக உருவெடுக்கும் எனவும், அத்தகைய சூழலை மறவர்களிடத்தே உண்டுபண்ணுவது இந்தியாவிற்கு நல்லதல்ல. எமது மீனவர்கள் கச்சத்தீவருகே செல்வதற்கு தடை விதிக்கும் இலங்கையை வன்மையாக கண்டிக்கின்றோம். மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை போர் குற்றவாளி ராஜபக்சே விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதென தெரிவித்தார்.




