௧௪. (14) வந்தால்..
பாரப்பா வந்தவனுக்கு நல்லயோகம்
பலித்திடவே வந்ததினால் தனமேலாபம்
சீரப்பா நோய்விலகும் மணமேகூடும்
சிறுவர்கட்கு கல்வியுடன் செல்வமோங்கும்
நேரப்பா குடும்பத்தின் கவலை நீங்கும்
நெடுந்தூரம் போனவரும் வரவேநேரும்
கோரப்பா பரம்பொருளை குணமுண்டாகும்
கொண்டயெண்ணம் கைகூடும் நாளீரேழில்.
ஆரூடத்தில் பதினான்கு வந்திருப்பதால், இனி உனக்கு நல்ல யோகம் உண்டாகப் போகிறது. பீடித்திருக்கும்