பஞ்சபாஷாண லிங்கம்.

பாஷாணங்களை சுத்தி செய்ததைப் பற்றி நேற்றைய பதிவில் பார்த்தோம். மிகவும் சிரமமான இந்த கட்டத்தில் தேறிவிட்டால் பாஷாணம் கட்டுவது அத்தனை சிரமமான காரியமில்லை. சுத்தி செய்யும் போது பாஷாணங்களின் எடையில் பெருமளவில் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. பரிசோதனையின் ஆரம்பத்தில் தலா நூறு கிராம் வீதம் ஐந்து பாஷாணங்களின் நிகர எடை ஐநூறு கிராம் இருந்தது. பரிசோதனையின் இறுதியில் முன்னூறு கிராம் அளவிலான