அகத்தியர் அருளிய பாய்ச்சிகை ஆரூடத்தில் இன்று 3,1,1 முதல் 3,6,6 வரையிலான பலன்களைப் பார்ப்போம்.
3,1,1.
தெய்வீகத் தன்மையாலே தேர்ந்து நீயடைவாய் லாபம்
பையமூன்றிரொன்றாக பாலனே விழுந்ததாலே
வையகந்தனிலுனக்கு வாழ்விலே பின்னமில்லை
செய்யவே தொழிலுமோங்கும் தீர்க்கமாய் ஆயுளுண்டாம்.
பாய்ச்சிகையை உருட்டும் போது ஒருமுறை மூன்றும் இருமுறை ஒன்றும் விழுந்ததால் தெய்வ பக்தியினால் வேண்டிய லாபங்களை அடைவாய்.