திருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்

"மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்ஞாலம் அறியவே நந்தி அருளது!காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்ஞாலத் தலைபவனை நண்ணுவர் அன்றே!"-திருமூலர்சைவ சமய திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக போற்றப் படுவது திருமூலர் அருளிய திருமந்திரம். பன்னிரு திருமுறைகளில் முதல் ஒன்பது திருமுறைகள் தோத்திர வகையாகவும், பத்தாவது திருமுறையான திருமந்திரம் சாத்திர வகையாகவும், பதினோராவது திருமுறை பிரபந்த வகையாகவும், பன்னிரெண்டாவது